முதல்வராக பதவி ஏற்றிருக்கும் தங்களுக்கு அறிவுரைக்கும் அளவு எனக்கு அறிவும் இல்லை, தைரியமும் இல்லை. அதனால் நம் முப்பாட்டன் ஒருவரின் வரிகளை, என்போன்றோரின் சார்பாக உங்கள் முன் வைக்கிறேன்.
புறநானூரு லிருந்து சில வரிகள்.
"...ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே!
மாரி பொய்ப்பினும்,வாரி குன்றினும்,
இயற்கை அல்ல செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்;
அது நற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொது மொழி கொள்ளாது,
பகடு புறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தர்குவை யாயின், நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே!
- புலவர் வெள்ளைக்குடி நாகனார்.
அதாவது,
மழை பெய்யாவிட்டாலும் விளைச்சல் குறைந்தாலும்
களவு முதலான செயற்கைக் காரணங்களால்
தீமைகள் விளைந்தாலும்
அரசர்களையே உலகம் பழித்து
காரணமாகச் சொல்லும்.
இதை அறிந்து கொண்டாய் எனில்,
யாரோ சொல்வதைப் பெரிதுபடுத்தாமல்
உழவர்களின் துன்பத்தைப் போக்கி
குடிமக்களைக் காப்பாய்.
அப்படிச் செய்தால் - உனக்கு
எல்லோரும் அடங்குவார்கள்.
நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டேன். அம்புட்டுத்தே(ன்).
புறநானூரு லிருந்து சில வரிகள்.
"...ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே!
மாரி பொய்ப்பினும்,வாரி குன்றினும்,
இயற்கை அல்ல செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்;
அது நற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொது மொழி கொள்ளாது,
பகடு புறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தர்குவை யாயின், நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே!
- புலவர் வெள்ளைக்குடி நாகனார்.
அதாவது,
மழை பெய்யாவிட்டாலும் விளைச்சல் குறைந்தாலும்
களவு முதலான செயற்கைக் காரணங்களால்
தீமைகள் விளைந்தாலும்
அரசர்களையே உலகம் பழித்து
காரணமாகச் சொல்லும்.
இதை அறிந்து கொண்டாய் எனில்,
யாரோ சொல்வதைப் பெரிதுபடுத்தாமல்
உழவர்களின் துன்பத்தைப் போக்கி
குடிமக்களைக் காப்பாய்.
அப்படிச் செய்தால் - உனக்கு
எல்லோரும் அடங்குவார்கள்.
நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டேன். அம்புட்டுத்தே(ன்).
அட! நல்லாருக்கே!
ReplyDeleteநன்றி சகோ! பிழைகளை மீறி பாராட்டியமைக்கு நன்றி.
ReplyDelete