திரையில் பார்த்ததில் அவ்வளவு நிறைவு இல்லை சகோ! நல்ல முயற்சி என்று சொல்லலாம். சுசீயின் 'வெண்ணிலா க.குழு வில் இருந்த எதார்த்தம் இதில் இல்லை. பா.சக்தியின் எழுத்தில் இருந்த இயல்பும் இதில் இல்லை.
பெரிய வருத்தம் என்னவெனில் படத்திற்கு உழைத்தவர்கள் எல்லாம் கதைக் களத்தின் மைந்தர்கள்.நிறைய சறுக்கல்கள். முதலில் " அப்புக் குட்டி"யின் தேர்வே தவறு. தேனிக்காரரே! நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், அகமலையில் எந்த மனிதருக்காவது "தொப்பை" இருக்கா? இல்லை இருக்கத்தான் முடியுமா? அதுவும் குதிரையை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் ஒரு மனிதருக்கு..?
சரி கதை 1982 ல் நடக்க வேண்டிய அவசியம் என்ன? 82 ல் அகமலை அப்படித்தான் இருந்ததா? ஊரே தூக்கி கொண்டாடும் குதிரைக்கு, கொல்லும் தண்ணியும் வைக்க ஆளில்லையா? அதற்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தான் கட்டிப் போடுவார்களா?
தாழ்த்தப் பட்டவர் பூசாரியா? அப்படி இருந்தாலும் அப்படி இருக்கும் போது சாதிப் பிரச்சினை எப்படி வரும்?
எல்லாத்தையும் விட பெரிய கூத்து... குதிரை தானாகவே போயி சன்டை போடுவது...இது போன்ற இன்னும் சில குறைகளைத் தாண்டி எம் மண்ணின் வழக்கு நடையும் நையாண்டியும் அங்கங்கே கொஞ்சம் ஈரமும் மனதிற்கு இதமாகத் தான் இருந்தது. தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவு இல்லை சகோ! மண்ணிக்கவும்.
பின் குறிப்பு: தேனி ஈஸ்வர், பாஸ்கர் சக்தி இருவரும் எனக்கு நெருங்கிய நன்பர்கள். நன்பர்களின் படம் என்பதற்காக சூப்பர்,சூப்பர் என்று சொல்லுவதே திரைத் துறைக்கு ஒரு சாபமாக இருக்கிறது.
இப்படிக்கு " ஒரு சாமானிய ரசிகன்"

No comments:
Post a Comment