ஈழத் தமிழர்கள் அழிந்ததற்கும், ஆயுதம் ஏந்தியதற்கும் காரணம் இந்தியா தான். இதை மறுக்கவே கூடாது.
நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சத்தியமாகத் தமிழக அரசியல் தலைவர்கள் தான். ( எம்ஜிஆர் கூட போராட்டத்திற்கு தான் உதவி செய்தாரே ஒழிய, அரசியல் தீர்வு காண தீவிர முனைப்பு காட்டவில்லை) இந்திராகாந்தி(சார்க் மாநாட்டில் ஏற்பட்ட அடிக்கு பழி வாங்கவே வி.புலிகளை வளர்த்து விட்டார் என்பதாகக் கேள்வி), ராஜீவ் ( தாய் வழித் தனையன்), கருனாநிதி( நினைத்திருந்தால் நிச்சயம் அரசியல் தீர்வு ஏற்படுத்தி கொடுத்திருக்க முடியும்(தன் மற்றும் தன் குடும்ப வளர்ப்பிற்கே நேரம் போதவில்லை)) ஜெயலலிதா(எப்பொழுதும் அக்கரையே இல்லாதவர்), வைகோ(பிரபாகரனை விட அதிக ஆக்க சக்தி கொண்டவர். ஆனால் வெறும் கூச்சலுடனே நிறுத்திக் கொண்டார்), பழ.நெடுமாறன்( நிஜமாகவே பாடுபட்டவர். ஆனால் முழுவதும் புலிகளையே நம்பி இருந்து விட்டார்.அதற்கு மேல் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை). நீங்கள் எதிர்பார்க்கும் மற்ற பெயர்கள் எல்லாம் அரசியல்வியாதிகள் மட்டுமே. மேலே சொன்ன அத்துணை பேர்களும் செத்தொழிந்து கொண்டிருந்த தமிழர்களை வைத்து படம் காட்டி தன்னை அரசியலில் முன்னிலைப் படுத்திக் கொண்டார்கள்.
ராஜபக்ஷேவையோ அவருக்கு முன் இருந்தவர்களையோ யாரும் குற்றம் சொல்லாதீர்கள். அதற்கான தகுதி நம்மில் யாருக்கும் இல்லை. " ஏனெனில் குற்றம் செய்த்தவர்களும் அதை தூண்டியவர்களும் நாம் தான்"
சகோதரர்களே! இணையத்தில் நீங்கள் பொங்கி எழும்பொழுதுகளில் சில விசயங்களைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
எல்லா நாட்டுச் சுதந்திரப் போராட்டதிலும் வன்முறைகளும் தீவிரப் போராளிகளும் உண்டு அவர்களுக்குச் சமமாக பேச்சுவார்த்தையில் முடிக்கவல்ல அறிஞர்களும் இருப்பர். அதற்கான வாய்ப்பை புலிகள்(ஈழத்தில்) பெரிதாக வளரவிடவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நமக்கு முழுமையான வாய்ப்புகள் இருந்தும், அதை நம் ஆதாயத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டோம்.
ராஜீவைக் கொன்ற புலிகளுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்ற வரை கூட சரிதான்.புலிகளின் கொட்டம் அழிந்து ஏறக்குறைய 2 ஆண்டுகளாக நாம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறோம்?
எனவே, சுய சிந்தனையை அழித்துக் கொண்டுவரும் தமிழர்களாகிய நாம், "ஈழத்தில் அழிந்த, அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்காக" யாரையாவது வசை மொழிய ஆசைப் பட்டால், உடனே சென்று முகம் காட்டும் கண்ணாடியைப் பார்த்துச் சொல்லுங்கள்...
"த்த்தூ..."( பிரச்சினைத் தீரும் வரை எச்சிலைத் துடைக்காதீர்கள் தயவுசெய்து)
இப்படிக்கு,
ஈழ வரலாறு தெரியாத ஒரு அரைகுறைத் தமிழன்.