சிற்சில ஊடல்கள் தவிர்த்துப் பார்த்தால், நான் ஆசிர்வதிக்கப்பட்ட கணவனாகவே இருக்கிறேன். நிஜம் சொல்ல வேண்டுமானால் காதலைத் தவிர வேறொன்றும் அவளுக்கு கொடுத்ததில்லை. அவளும் கேட்டதில்லை.
ஆனால் அவள் கொடுத்ததோ அளப்பரியது.
நான் அன்னையிழந்து நின்றபோது வந்து நிரப்பினாள். இன்றுவரை அவள் ஏற்ற, அவ்விரு இடத்திலும் சிறு குறையுமின்றி முழுதாய் நிறைந்திருக்கிறாள்.
காலத்துடன் கலந்தே... காதலுடன் கரைந்தே, கலவிக் கொண்டிருக்கிறோம் எங்கள் வாழ்க்கையை...